கிர்குக் மாகாணம்
ஈராக்கின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
கிர்குக் கவர்னரேட் (Kirkuk Governorate, அரபு மொழி: محافظة كركوك Muḥāfaẓat Karkūk Kurdish Parêzgay Kerkûk, Syriac Karḵ Sloḵ, துருக்கியம்: Kerkük ili ) அல்லது கிர்குக் மாகாணம் என்பது வடக்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். மாகாணத்தின் பரப்பளவு 9,679 சதுர கிலோமீட்டர்கள் (3,737 sq mi) . மாகாணத்தில் 2017 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகையானது 1,259,561 பேர்.[1] மாகாண தலைநகராக கிர்குக் நகரம் உள்ளது. இந்த நகரமானமானது நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1976 முதல் 2006 வரை, இந்த மாகாணம் "தேசியமயமாக்கல்" என்று பொருள்படும் அட்-தமீம் கவர்னரேட் [2] என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. இது பிராந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களின் தேசிய உரிமையைக் குறிக்கிறது. 1976 க்கு முன்னர் இது கிர்குக் கவர்னரேட் என்று அழைக்கப்பட்டுவந்தது. 2006 இல், "கிர்குக் கவர்னரேட்" என்ற பெயர் மீண்டும் வைக்கப்பட்டது.