கிரோனா பெருங்கோவில்
ரோமானிய காதோலிக் புனித ஆலயம்,கீரோனா,கட்டலோனியா(ஸ்பெயின்) / From Wikipedia, the free encyclopedia
கிரோனாவின் புனித மேரி பெருங்கோவில் என்பது கிரோனா ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது எசுப்பானியாவில் உள்ள காத்தலோனியாவின் கிரோனாவில் அமைந்துள்ளது. இதன் உட்பகுதியில் காணப்படும் கோயிலின் நடுக்கூடம் கோதிக் கட்டடக்கலை வடிவமைப்பில் அமைந்த அகலமான நடுக்கூடம் ஆகும். இதன் அகலம் 22 மீட்டர்கள் (72 அடி), மற்றும் இது ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் புனித பேதுரு பேராலயத்திற்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய அகலமான நடுக்கூடத்தைக் கொண்ட பெருங்கோவில் ஆகும். பதினோராம் நூற்றாண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது ரோமனெஸ்க் பாணியிலேயே அமைக்கப்பட்டது, பின் 13 மூன்றாம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து கோதிக் பாணியில் அமைக்கப்பட்டது. பெருங்கோவில் நாற்பத்தைந்து மீட்டர்கள் உயரம் கொண்டது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் கிரோனாவின் புனித மேரி பெருங்கோவில் Cathedral of Saint Mary of Girona Santa Maria de Girona, அடிப்படைத் தகவல்கள் ...
கிரோனாவின் புனித மேரி பெருங்கோவில் Cathedral of Saint Mary of Girona Santa Maria de Girona | |
---|---|
தேவாலயம் ஒரு கோபுரத்துடனான தோற்றம். | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கிரோனா, காத்தலோனியா, எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 41°59′15″N 2°49′35″E |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | லத்தின் |
மண்டலம் | கிரோனா ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1038[1] |
நிலை | பெருங்கோவில் |
தலைமை | பிரான்செஸ்க் பார்டோ இ அர்டிகாஸ் |
இணையத் தளம் | catedraldegirona.org |
மூடு