கிராண்ட் டிரங்க் விரைவு வண்டி
இந்தியாவில் உள்ள தொடர்வண்டி / From Wikipedia, the free encyclopedia
கிராண்ட் டிரங்க் விரைவுவண்டி ( Grand Trunk Express) தினமும் செயல்படும் ஒரு அதிவிரைவு தொடர்வண்டி ஆகும். புது டெல்லி தொடர்வண்டி நிலையத்தில்[1] இருந்து சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்வரை செல்லும் இந்தத் தொடருந்து இந்திய ரயில்வேயினால் இயக்கப்படுகிறது. வரலாற்று சிறப்புகள் வாய்ந்த மற்றும் பழம்பெருமைகள் நிறைந்த தொடர்வண்டிகளில் இதுவும் ஒன்று. இதன் வண்டி எண் 12615/12616. 12615 என்ற வண்டி எண்ணுடன் சென்னை முதல் புது டெல்லி வரையிலும், 12616 என்ற வண்டி எண்ணுடன் புது தில்லி முதல் சென்னை வரையிலும் கிராண்ட் டிரங்க் விரைவுத் தொடர்வண்டி செயல்படுகிறது.
விரைவான உண்மைகள் கிராண்ட் டிரங்க் விரைவுவண்டி, கண்ணோட்டம் ...
மூடு