கிட் ஹாரிங்டோன்
ஆங்கில நடிகர் / From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்டோபர் கேட்ஸ்பி கரிங்டோன் (ஆங்கில மொழி: Christopher Catesby Harington)[2] (பிறப்பு: 26 திசம்பர் 1986) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு முதல் எச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேம் ஆஃப் துரோன்ஸ்[3][4] (2011-2019) என்ற காவிய கற்பனைத் தொடரில் ஜான் சினோ என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகராகவும், சர்வதேச அங்கீகாரத்தையும் மற்றும் பல பாராட்டுகளையும் பெற்று கொடுத்தது.
கிட் கரிங்டோன் | |
---|---|
பிறப்பு | கிறிஸ்டோபர் கேட்ஸ்பி கரிங்டோன்[1] 26 திசம்பர் 1986 (1986-12-26) (அகவை 37) லண்டன் இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2008–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ரோஸ் லெஸ்லி (தி. 2018) |
இவர் பொம்பெய் (2014), செவன்த் சன் (2014) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளியான ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2 என்ற திரைப்படத்தில் குரல் நடிகராக பணியாற்றியுள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு[5] என்ற படத்தில் டேன் விட்மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிகை ரோஸ் லெஸ்லி என்பவரை 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் உண்டு.