கிஜ்லியோ தீவு
From Wikipedia, the free encyclopedia
கிஜ்லியோ தீவு (Isola del Giglio) என்பது திர்ரேனியக் கடலில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள இத்தாலியத் தீவும், கொமியூனும் ஆகும். இது இத்தாலியின் குரெசெட்டோ மாகாணத்தில் அமைந்துள்ளது. தொஸ்கானோ தீவுக்கூட்டத் தேசியப் பூங்காப் பிராந்தியத்தில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள முக்கிய ஏழு தீவுகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் அத்தீவுக்கூட்டத்தில் எல்பாத் தீவினை அடுத்து இதுவே மிகப்பெரிய இரண்டாவது தீவு இதுவாகும். கிஜ்லியோ போர்ட்டோ, கிஜ்லியோ கஸ்டெலோ[1], கிஜ்லியோ கம்பேஸ் ஆகியவை இத்தீவில் அமைந்துள்ள மிக முக்கியமான குடியேற்றங்கள் ஆகும். கி.மு 600 ஆமாண்டிலி இடம்பெற்ற எத்துரூஸ்கன் கப்பல் மூழ்கல் நிகழ்வு இடம்பெற்ற தளத்தில் இத்தீவும் இடம் வகிக்கின்றது.[2]
விரைவான உண்மைகள் கிஜ்லியோ தீவு, நாடு ...
கிஜ்லியோ தீவு | |
---|---|
கொம்யூன் | |
கிஜ்லியோ தீவுக் கொமியூன் | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | தசுக்கானி |
மாகாணம் | Grosseto (GR) |
Frazioni | Isola di Giannutri, Giglio Castello, Giglio Porto, Giglio Campese |
பரப்பளவு | |
• மொத்தம் | 23.80 km2 (9.19 sq mi) |
ஏற்றம் | 405 m (1,329 ft) |
மக்கள்தொகை (1 சனவரி 2015) | |
• மொத்தம் | 1,447 |
இனம் | Gigliesi |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 58010, 58012, 58013 |
Dialing code | 0564 |
புனிதர் நாள் | செப்டம்பர் 15 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மூடு