கான்சு
From Wikipedia, the free encyclopedia
கான்சு (Gansu எளிய சீனம்: 甘肃; மரபுவழிச் சீனம்: 甘肅; பின்யின்: Gānsùⓘ) என்பது சீன மக்கள் குடியரசைச் சேர்ந்த, நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணங்களுள் ஒன்று. கான்சு மாகாணத்தில் 26 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் (2009 கணக்கெடுப்பின்படி) இந்த மாகாணம் 425,800 சதுர கிலோமீட்டர் (164,400 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. மாகாணத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள லாண்சூ இதன் தலைநகராகும்.
விரைவான உண்மைகள் Gansu Province 甘肃省, பெயர் transcription(s) ...
Gansu Province
甘肃省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 甘肃省 (Gānsù Shěng) |
• சுருக்கம் | 甘 or 陇/隴 (pinyin: Gān or Lǒng) |
சீனாவில் அமைவிடம்: Gansu Province | |
பெயர்ச்சூட்டு | 甘 gān: கான்சு மாவட்டம், ழாங்யே 肃/肅 sù: சுசூ மாவட்டம், சியுகுவான் |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | லாண்சூ |
பிரிவுகள் | 14 அரச தலைவர், 86 கவுண்டி மட்டம், 1344 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | வாங் சான்யுன் |
• ஆளுநர் | லியு வெய்பிங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,25,800 km2 (1,64,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 7வது |
மக்கள்தொகை (2010)[2] | |
• மொத்தம் | 2,55,75,254 |
• தரவரிசை | 22வது |
• அடர்த்தி | 60/km2 (160/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 27வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான்: 91% ஊய்: 5% தொங்சியாங் முஸ்லீம்கள்: 2% திபெத்தியர்: 2% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | ழோங்யுவான் மாண்டரின், லான்யின் மாண்டரின், அம்தோ திபெத்தியம் |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-62 |
GDP (2014) | CNY 683.5 பில்லியன் US$ 111.2 பில்லியன் (27வது) |
• per capita | CNY 26427 US$ 4,302 (30வது) |
HDI (2010) | 0.630[3] (நடுத்தரம்) (28வது) |
இணையதளம் | http://www.gansu.gov.cn (எளிய சீனம்) |
மூடு
இது திபெத் பீடபூமி மற்றும் உவாங்டு பீடபூமி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக மங்கோலியா, உள் மங்கோலியா, நிங்ஜியா ஆகியவை வடக்கிலும், சிஞ்சியாங், மற்றும் சிங்காய் மாகாணங்கள் மேற்கிலும் சிச்சுவான் தெற்கிலும், ஷான்சி மாகாணங்கள் கிழக்கேயும் உள்ளன. மஞ்சள் ஆறு மாகாணத்தின் தெற்கு பகுதியின் வழியாக செல்கிறது.