காத்தலோனியா
From Wikipedia, the free encyclopedia
காத்தலோனியா (Catalonia, காட்டலான்: Catalunya; ஆக்சிதம்: Catalonha; எசுப்பானியம்: Cataluña) என்பது எசுப்பானியாவின் ஒரு தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் பார்செலோனா ஆகும். இதன் பரப்பளவு 32,114 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 7,504,881 ஆகும். இது எசுப்பானியா நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. காத்தலோனியா மாகாணத்திற்கு, தனி அரசியலமைப்பு சபை, தனி நாடாளுமன்றம், தனி தேசிய கீதம்,[1] தனி கொடி மற்று முத்திரைகள் கொண்டது.[2][3]. காத்தலோனியா எசுப்பானியாவின் நான்கு மாகாணங்களை அடக்கி உள்ளது: பார்செலோனா, கிரோனா, இலைய்டால், தரகோனா. The capital and largest city is பார்செலோனா இதன் தலைநகரமாகவும் மிகப் பெரிய நகரமாகவும் விளங்குகின்றது; எசுப்பானியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஐரோப்பாவின் பெரும் பெருநகரப் பகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 2017 அக்டோபர் 27 இல் காத்தலோனியா தன்னைத் தனிநாடாக அறிவித்தது.[4]
காத்தலோனியா | |
---|---|
ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சிப் பகுதி | |
காத்தலோனியா தன்னாட்சிப் பகுதி | |
காத்தலோனியாவின் அமைவிடம் | |
தன்னாட்சி அரசுகள் | ஸ்பெயின் |
அரசியல் தலைநகர் | பார்செலோனா |
ஸ்பெயினின் ஆட்சிமன்ற பகுதிகள் | பார்செலோனா மாகாணம், கிரோனா மாகாணம், லெய்டால் மாகாணம், தரகோனா மாகாணம் |
அரசு | |
• வகை | அரசியலமைப்பு கொண்ட அரசு |
• நிர்வாகம் | காத்தலோனியா கவர்னர் ஜெனரல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 32,114 km2 (12,399 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | ஆறாமிடம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 75,04,881 |
• அடர்த்தி | 230/km2 (610/sq mi) |
• எசுபானியா தன்னாட்சிப் பகுதி மக்கட்தொகையில் தரவரிசை | இரண்டாமிடம் |
• விழுக்காடு | ஸ்பெயின் மக்கட்தொகையில் 16% |
இனம் | காத்தலோனியர் |
ISO 3166-2 | CT |
அரசு மொழிகள் | கட்டலான் மொழி, எசுப்பானிய மொழி,அக்சிடான் மொழி |
காத்தலோனிய நாடாளுமன்றம் | 135 உறுப்பினர்கள் |
காங்கிரஸ் (ஸ்பெயின்) | 47 உறுப்பினர்கள் |
ஸ்பானிய செனட் சபை | 16 செனட்டர்கள |
இணையதளம் | Generalitat de Catalunya |
முந்தைய காத்தலோனியா மன்னராட்சியின் பெரும்பகுதி தற்போதைய காத்தலோனியாவில் அடங்கியுள்ளது; மற்ற பகுதி பிரான்சின் பிரன்னீசு-ஓரியன்டேல் மாகாணத்தின் பகுதியாக உள்ளது. இதன் எல்லையாக வடக்கில் பிரான்சும் அந்தோராவும் உள்ளன; கிழக்கில் நடுநிலக் கடல் உள்ளது; எசுப்பானியாவின் பிற தன்னாட்சிப் பகுதிகளான அரகொன் மேற்கிலும் வளன்சியான் மாநிலம் தெற்கிலும் உள்ளன. இப்பகுதியில் காத்தலான், எசுப்பானியம் மற்றும் ஆக்சிதத்தின் அரணிய மொழியும் அலுவல்முறை மொழிகளாக விளங்குகின்றன.[5] பார்சிலோனா கால்பந்துக் கழகம் உலக அளவில் முதல் இடத்தை வகிக்கிறது.[6]
காத்தலோனியா தன்னாட்சி பகுதி, எசுப்பானியாவிலிருந்து பிரிந்து சுதந்திரமான நாடாக அமைவதற்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 80% மக்கள் காத்தலோனியா தனி நாடாக பிரிவதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.[7]