கண்டகி ஆறு, நேபாளம்
From Wikipedia, the free encyclopedia
காளி கண்டகி ஆறு அல்லது கண்டகி ஆறுஅல்லது நாராயணீ ஆறு (Kali Gandaki or Gandaki River or Narayani River), நேபாள நாட்டின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். நேபாளத்தில் இவ்வாற்றை காளி-கண்டகி[1] என்றும் நாராயணீ என்றும், இந்தியாவில் கண்டகி என்றும் அழைப்பர். கண்டகி ஆறு, துணை ஆறாக, இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சோன்பூரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. நேபாளத்தில் பாயும் காளி-கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை வைணவ சமயத்தினர் திருமாலின் அம்சமாக கருதி பூஜையில் வைத்து வழிபடுவர்.
காளி-கண்டகி (காளி) | |
நாராயணீ | |
River | |
காளி-கண்டகி ஆறு, நேபாளம் | |
நாடுகள் | திபெத் (சீனா), நேபாளம், இந்தியா |
---|---|
கிளையாறுகள் | |
- இடம் | திரிசூலி ஆறு, புத்திகண்டகி, மர்ஷியாந்தி, மடி ஆறு, சேத்தி-கண்டகி ஆறு |
- வலம் | பாடிகாட் ஆறு |
நகரங்கள் | லோ மாந்தாங், ஜோம்சோம், பெனி, (தவளகிரி), குஸ்மா, ரித்தி, தேவ்காட், நாராயணன்கார், சித்வான், வால்மீகிநகர், திரிவேணி, நேபாளம், ஹாஜிப்பூர், இந்தியா, சோன்பூர், பாகஹா, இந்தியா |
உற்பத்தியாகும் இடம் | நுபின் இமயமலை பனியாறு |
- அமைவிடம் | மஸ்டாங் மாவட்டம், நேபாளம், நேபாளம் |
- உயர்வு | 6,268 மீ (20,564 அடி) |
- ஆள்கூறு | 29°17′0″N 85°50′5″E |
கழிமுகம் | கங்கை ஆறு |
- அமைவிடம் | சோன்பூர், இந்தியா |
- elevation | 44 மீ (144 அடி) |
- ஆள்கூறு | 25°39′9″N 85°11′4″E |
நீளம் | 630 கிமீ (391 மைல்) |
வடிநிலம் | 46,300 கிமீ² (17,877 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
கங்கை ஆற்றின் துணைஆறுகளான கண்டகி மற்றும் காக்கரா ஆறுகள்
|
கோசி மற்றும் காக்கிரா ஆறுகளிடையே பாயும் கண்டகி ஆறு, 8000 மீட்டருக்கும் அதிக உயரத்தில் உள்ள அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு கொடுமுடிகளிலிருந்து உற்பத்தியாகிறது. இமயமலையில் உருவாகும் கண்டகி ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி, புனல் மின்சாரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நீர்தேக்கத்தின் நீர் பிடிப்பு பகுதி 46,300 சதுர கிலோ மீட்டராகும்.