கணிதவியலாளர்
From Wikipedia, the free encyclopedia
கணிதவியலாளர் (ஒலிப்புⓘ) என்பவர் கணிதத்தில் பரந்த அறிவுடையவரும், கணிதச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அந்த அறிவைப் பயன்படுத்துபவரும் ஆவார். கணிதம் என்பது எண்கள், தரவுகள், தொகுப்புக்கள், கணியங்கள், அமைப்பு, வெளி, மாதிரிகள், மாற்றம் என்பவற்றோடு தொடர்புடையது.
தூய கணிதத்துக்குப் புறம்பான சிக்கல்களைத் தீர்க்கும் கணிதவியலாளர் பிரயோக கணிதவியலாளராவார். பிரயோக கணிதவியலாளர்கள் என்போர், தமது சிறப்பு அறிவையும், துறைசார் வழிமுறைகளையும் பயன்படுத்திப் பல்வேறு அறிவியல் துறைகளோடு தொடர்புள்ள கணிதப் பிரச்சினைகளை அணுகும் கணித அறிவியலாளர்கள் ஆவர். பல்வேறுபட்ட பிரச்சினைகளில் துறைசார் கவனத்துடனும், கோட்பாட்டு முறைகளைப் பயன்படுத்தியும், கணித மாதிரிகளை ஆய்வு செய்தல் அவற்றை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளில் பிரயோக கணிதவியலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
பிரயோக கணிதத் துறையானது அறிவியல், பொறியியல், வணிகம், தொழிற்றுறை போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுகின்ற கணித முறைகளோடு தொடர்புபட்டது. அதனால், இத்துறைசார் வல்லுனர்களான பிரயோக கணிதவியலாளர்கள், அறிவியல், பொறியியல், வணிகம் என்பவற்றை உட்படுத்திய பல்வேறு கணிதம்சார் செயற்பாடுகளைக் கொண்ட துறைகளில், தமது அறிவைப் பயன்படுத்துகின்றனர்.