ஓம்
பிரணவ மந்திரம் / From Wikipedia, the free encyclopedia
ௐ,ஓம் (பொதுவான வரிவடிவம்:ॐ; தேவநாகரி வரிவடிவம்: ओं அல்லது ओ३म्; தமிழில்: ௐ) என்பது இந்து, பௌத்தம், சமணம், சீக்கியம் மற்றும் பூர்வீக தெற்காசிய சமயங்களில் உள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும். இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும். மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.[1][2]
“ | ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும், ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும், |
” |
— (மய விஞ்ஞானம்) |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
ஓம் என்ற மின்னியல் அலகு பற்றிய கட்டுரைக்கு ஓம் (மின்னியல்) இற்குச் செல்க.