ஒரிகியுலா பெருங்கோவில்
From Wikipedia, the free encyclopedia
ஒரிகுவெலா பெருங்கோவில் (ஆங்கிலம்: Orihuela Cathedral; எசுப்பானியம்: Catedral de Orihuela) என்பது தெற்கு எசுப்பானியாவின் ஒரிகுவெலா எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இப்பெருங்கோவில் இதற்கு முன்பிருந்த ஒரு இசுலாமியப் பள்ளிவாசலின் மேலே கட்டப்பட்டது. 1281 ஆம் ஆண்டில் கஸ்டிலே மன்னன் பத்தாம் அல்ஃபோன்சோவின் கட்டளைக்கிணங்க இப்பெருங்கோவில் கட்டப்பட்டது. கோதிக்கு, மறுமலர்ச்சி, பரோக் கட்டிடக்கலை அம்சங்கள் பொருந்தியதாக இப்பெருங்கோவில் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஒரிகுவெலா பெருங்கோவில் Orihuela Cathedral Catedral de Orihuela, அமைவிடம் ...
ஒரிகுவெலா பெருங்கோவில் Orihuela Cathedral Catedral de Orihuela | |
---|---|
பெருங்கோவிலின் பிரதான முகப்பு வாயிலின் தோற்றம் | |
அமைவிடம் | ஒரிகுவெலா, எசுப்பானியா |
நாடு | எசுப்பானியா |
சமயப் பிரிவு | உரோமன் கத்தோலிக்கம் |
Architecture | |
பாணி | கோதிக்கு, மறுமலர்ச்சி, பரோக்கு |
மூடு