ஏஜியன் பிராந்தியம்
From Wikipedia, the free encyclopedia
துருக்கியின் ஏஜியன் பிராந்தியம் (Aegean Region) (துருக்கியம்: Ege Bölgesi) துருக்கி நாட்டின் 7 புவியியல் பிராந்தியங்களில் ஒன்றாகும். ஏஜியன் பிராந்தியம் துருக்கியின் மேற்கில், ஏஜியன் கடலை ஒட்டி உள்ளது. இதன் பெரிய நகரம் இஸ்மீர் ஆகும். பிற நகரங்கள் மணிசா, அய்தின், டெனிஸ்லி, முக்லா, அஃப்யோன்கராகிசர் மற்றும் குதாயா ஆகும். துருக்கியின் நான்கு கடற்கரைகளில் ஏஜியன் கடற்கரை அதிக நீளம் கொண்டது. ஏஜியன் பிராந்தியத்தில் உள்ள பமுக்கலெ வெந்நீரூற்றுகள் துருக்கி நாட்டின் மேற்கே டெனிசிலி மாகாணத்தில் அமைந்துள்ளது. இது யுனெசுக்கோ அமைப்பு இதனை உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது
விரைவான உண்மைகள் துருக்கியின் ஏஜியன் பிராந்தியம் Ege Bölgesi, நாடு ...
துருக்கியின் ஏஜியன் பிராந்தியம்
Ege Bölgesi | |
---|---|
துருக்கியில் (சிவப்பு நிறத்தில்) ஏஜியன் பிராந்தியம் | |
நாடு | துருக்கி |
பெரிய நகரம் | இஸ்மீர் |
மாகாணங்கள் | 8
|
பரப்பளவு | |
• மொத்தம் | 85.000 km2 (32.819 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5வது |
மக்கள்தொகை (2021 est.) | |
• மொத்தம் | 1,04,77,153 |
• அடர்த்தி | 121/km2 (310/sq mi) |
இனங்கள் | துருக்கியர்கள், ஏஜிலியர்கள் |
நேர வலயம் | ஒசநே+03:00 (துருக்கி சீர் நேரம்) |
மூடு