எலும்புத்தீவு
From Wikipedia, the free encyclopedia
எலும்புத்தீவு அல்லது போன் தீவு (ஆங்கில மொழி: Bone Island) மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள பல தீவுகளில் இதுவும் ஒன்றாகும். மிகச் சிறிய தீவான இது மட்டக்களப்பு வாவி கடலில் கலக்கும் முகத்துவாரத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.[1][2] உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் இது உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை சிறிது கவரும் இடமாக உள்ளது. படகு மூலம் இதை சுற்றிப்பார்க்க சிறு தொகை அறவிடப்படுகிறது. மீனவர்கள் இதனை தற்காலிகமாக பாவிப்பதும் உண்டு.
விரைவான உண்மைகள் நாடு, மாவட்டம் ...
எலும்புத்தீவு Bone Island | |
என்புத்தீவு | |
தீவு | |
எலும்புத்தீவு | |
நாடு | இலங்கை |
---|---|
மாவட்டம் | மட்டக்களப்பு மாவட்டம் |
பகுதி | மட்டக்களப்பு வாவி |
ஆள்கூறு | 7°45′12″N 81°41′24″W |
அருகிலுள்ள நகர் | மட்டக்களப்பு |
மூடு
உதவி அரசாங்க அதிபர் ஜே. ஏ. போன் (1833 - 1837),[3] இத்தீவில் ஒர் சிறிய வளமனையைக் கட்டியிருந்தார்.[4] அவருடைய பெயரை நேரடியாக என்புத் தீவு (எலும்புத்தீவு) என மொழிபெயர்த்ததால், பின்னர் இப்பெயரே நிலைத்துவிட்டது.