எலன் கெல்லர்
அமெரிக்க எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் (1880-1968) / From Wikipedia, the free encyclopedia
ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். இள வயதிலேயே இவர் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார். இவரின் தந்தை அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடுத்தர குடும்பம் இவர்களுடையது. ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லருக்கு பதினெட்டு மாதச் சிறுமியாக இருந்த பொழுது மூளைக் காய்ச்சல் வந்தது.[1]
விரைவான உண்மைகள் ஹெலன் கெல்லர், பிறப்பு ...
ஹெலன் கெல்லர் | |
---|---|
1920இல் ஹெலன் கெல்லர் | |
பிறப்பு | ஹெலன் ஆடம்ஸ் கெல்லர் (1880-06-27)சூன் 27, 1880 துஸ்கம்பியா, அலபாமா, U.S. |
இறப்பு | சூன் 1, 1968(1968-06-01) (அகவை 87) ஆர்கன் ரிட்ஜ் ஈஸ்டன், கனெடிகட், U.S. |
தொழில் | ஆசிரியர், ஆரசியல் ஆர்வளர், விரிவுரையாளர் |
கல்வி | ராட்சிலிஃப் கல்லூரி |
கையொப்பம் | |
மூடு