எத்திலீன்
From Wikipedia, the free encyclopedia
எத்திலீன் (Ethylene) என்பது C2H4. என்னும் வேதியியல் வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதன் வேதிவாய்பாட்டை H2C=CH2 என்றும் எழுதலாம். தூய்மையான எத்திலீன் வாயு நிறமற்றது[2] . தீப்பற்றி எரியக்கூடியது. சற்றே இனிய மணம் கொண்டது ஆகும். ஐயுபிஏசி முறையில் எத்திலீனின் பெயர் எத்தீன் ஆகும். கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்பு கொண்ட ஐதரோகார்பன்களான ஆல்கீன்களில் எளிய ஆல்க்கீன் எத்திலீன் ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
Ethene எத்தீன் | |
இனங்காட்டிகள் | |
74-85-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C2H4 | |
வாய்ப்பாட்டு எடை | 28.05 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற வளிமம் |
அடர்த்தி | 1.178 கி.கி/மீ3 15 °செ இல், வளிமம் [1] |
உருகுநிலை | −169.2 °செ (104.0 K, -272.6 °F) |
கொதிநிலை | −103.7 °செ (169.5 K, -154.7 °F) |
3.5 மி.கி/100 மி.லி (17 °செ) | |
காடித்தன்மை எண் (pKa) | 44 |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | சுழி |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
+52.47 கியூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
219.32 J•K−1•மோல்−1 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | மிக எளிதில் தீப்பிடிக்கும் (F+) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | எத்தீன் அசிட்டிலீன் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எத்திலீன் இரசாயனத் தொழிலில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் அதன் உலகளாவிய உற்பத்தி 2016 ஆம் ஆண்டில் 150 மில்லியன் டன்கள் ஆகும் [3]. வேறு எந்த கரிம சேர்மத்தையும் விட இது அதிகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது [4][5].இந்த பெருமளவு உற்பத்தியின் பெரும்பகுதி பரவலாகப் பயன்படுத்தப்படும் நெகிழியான பாலியெத்திலீன் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பாலியெத்திலீன் எத்திலீன் அலகுகளால் ஆக்கப்பட்ட நீள நீளமான சங்கிலிகளால் ஆனது ஆகும். ஒரு தாவர நொதியாகவும் எத்திலீன் பயன்படுகிறது. காய்களை பழுக்கச் செய்ய இதைப் பயன்படுத்துவார்கள் [6]. எத்திலீனின் நீரேற்றே எத்தனால் ஆகும்.