உள்துறை அமைச்சகம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) என்பது நாட்டின் உள்விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இவ்வமைச்சகத்தின் பணிகள் பல்வேறாகயிருந்தாலும் முக்கியமாக உள்நாட்டின் பாதுகாப்பையும், உள்நாட்டுக் கொள்கையையும் உறுதிசெய்வதாகும். மாநில அரசியல் அமைப்பு உரிமைகளுக்குட்பட்டு மனிதவளம், நிதி உதவி மற்றும் ஆலோசனைகளை மாநிலங்களுக்கு வழங்குகிறது.[3] இதன் தலைவர் உள்துறை அமைச்சர் எனப்படுவார். உள்துறை இணை அமைச்சர்களும், இந்தியக் குடியியல் அதிகாரிகளான செயலர்களும் இவ்வமைச்சகத்தில் செயல்படுகிறார்கள்.
விரைவான உண்மைகள் அமைச்சகம் மேலோட்டம், அமைப்பு ...
गृह मंत्रालय | |
அமைச்சகம் மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15) |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | உள்துறை அமைச்சகம், நடுவண் செயலகக் கட்டிடம், புது தில்லி 28°36′50″N 77°12′32″E |
ஆண்டு நிதி | ரூபாய் 196034.94 கோடி (2023–24)[1] |
அமைச்சர் | |
பொறுப்பான துணை அமைச்சர்கள் |
|
அமைச்சகம் தலைமை |
|
கீழ் அமைப்புகள் | |
வலைத்தளம் | mha.nic.in |
மூடு
இதன் தற்போதைய மூத்த அமைச்சர் அமித் சா மற்றும் இணை அமைச்சர்கள் நித்தியானந்த ராய், அஜய் மிஸ்ரா தெனி மற்றும் நிசித் பிரமாணிக் ஆவார்.