உருவவியல்
உடலின் புறத்தோற்றத்தினை விவரிக்கும் இயல் / From Wikipedia, the free encyclopedia
உயிரியலில் உருவவியல் (Morphology) என்பது உயிரினங்களின் உருவம், அமைப்பு பற்றியும், அவற்றின் சிறப்பு இயல்புகள் பற்றியுமான அறிவியல் ஆகும். [1][2] உருவவியலில் உயிரினத்தின் அமைப்பு, வடிவம், நிறம், அமைந்திருக்கும் ஒழுங்கு போன்ற வெளித் தோற்றமும்[3] , உள் உறுப்புக்களின் வடிவம் அமைப்பும் கருத்தில் கொள்ளப்படும். உயிரினத்தினதோ, அல்லது அதன் பகுதிகளினதோ முழுமையான தோற்றம் (gross structure) பற்றிய அறிவு பெறப்படும். உயிரியல் வகைப்பாட்டில் உயிரினங்களின் உருவவியல் அறிவு முக்கிய இடம் பெறுகின்றது.