ஈன்றிக் வொன் இசுட்டீபன்
செருமனிய பேரரசின் அஞ்சல் இயக்குனர் / From Wikipedia, the free encyclopedia
ஐன்றிக் வொன் இசுட்டீபன் (இடாய்ச்சு மொழி: Ernst Heinrich Wilhelm Stephan, ஆங்கில மொழி: Heinrich von Stephan சனவரி 7, 1831 - ஏப்ரல் 8, 1897) செருமன் பேரரசின் பொது அஞ்சல் இயக்குனராகப் பதவி வகித்தவர். செருமனியின் அஞ்சல் சேவையை ஒழுங்கமைத்தவர் இவரே. 1874 ஆம் ஆண்டில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தை நிறுவுவதிலும் பெரும்பங்கு இவருக்கு உண்டு. 1877 ஆம் ஆண்டில் செருமனியில் தொலைபேசிச் சேவையை இவர் அறிமுகப்படுத்தினார்.[1]