இரெனே பாவலோரோ
அர்கெந்தீனா இதய அறுவை மருத்துவ வல்லுநர் / From Wikipedia, the free encyclopedia
இரெனே கெரோனிமோ பாவலோரோ (René Gerónimo Favaloro, சூலை 12, 1923 – சூலை 29, 2000) ஒரு புகழ்பெற்ற அர்கெந்தீனா இதய அறுவை மருத்துவ வல்லுநரும் மாரடைப்பு நோய்க்குத் தீர்வாக இதயக் குழாய்க்கு மாற்றுவழி அமைக்கும் அறுவையைப்பற்றிய சிறந்த கல்வியாளரும் ஆவார். தொடை-கால் பகுதியில் காணப்படும் மிக நீளமான "சபனசு" கழிவுக் குருதிக்குழாய் (great saphenous vein) வழியாகச் செய்யும் மாற்றுப்பாதை அறுவை மருத்துவத்தில் புகழ்பெற்றவர்.
விரைவான உண்மைகள் இரெனே பாவலோரோ René Favaloro, பிறப்பு ...
இரெனே பாவலோரோ René Favaloro | |
---|---|
பிறப்பு | இரெனே கெரோனிமோ பாவலோரோRené Gerónimo Favaloro சூலை 12, 1923 இலா பிளாட்டா, அர்கெந்தீனா |
இறப்பு | சூலை 29, 2000(2000-07-29) (அகவை 77) புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா |
இறப்பிற்கான காரணம் | தன்னைத்தானே சுட்டு தற்கொலை |
தேசியம் | அர்கெண்டீனன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலா பிளாட்டா தேசியப் பல்கலைக்கழகம் |
செயற்பாட்டுக் காலம் | 1949–2000 |
பெற்றோர் | குவான் மானுவேல் பாவலோரா (Juan Manuel Favaloro) வும் கெனி ஈடா இரஃபேலி (Geni Ida Raffaeli)[1] |
வாழ்க்கைத் துணை | மரியா அண்டோனியோ இடெல்காடோ (1951–1998) María Antonia Delgado |
விருதுகள் | இளவரசர் மஃகிடோல் விருது (1998), பெருவின் கதிரவ வரிசையர் (1973), இத்தாலியக் குடியரசின் தகுதிய வரிசையர் (1978), கனடாவின் கெயிர்டினர் அனைத்துலக விருது (1987), தங்கப் பட்டய விருது (1993), கோனெக்சு விருது (1993) |
கையொப்பம் |
மூடு