இரசக்கலவை (வேதியியல்)
மற்ற உலோகத்துடன் மெர்க்குரி கலக்கப்பட்டு கிடைக்கும் கலப்புலோகம் / From Wikipedia, the free encyclopedia
இரசக்கலவை (An amalgam) என்பது உலோகங்களுடன் பாதரசம் கலந்த கலப்புலோகம் ஆகும். கலப்புலோகமானது அதில் கலந்துள்ள பாதரசத்தின் விகித அளவைப் பொறுத்து, திரவ நிலையிலோ, பசை போன்ற நிலையிலோ காணப்படும். இந்த கலப்புலோகங்கள் மாழைப் பிணைப்பின் காரணமாக உருவாகின்றன.[1] நிலை மின்னியல் கவர்ச்சி விசையுடன் நகரும் எதிர்மின்னிகள் அனைத்து நேர்மின் சுமையுடைய உலோக அயனிகளை ஒரு படிக அமைப்பினுள் இணைத்து வைக்கின்றன.[2] ஏறத்தாழ எல்லா உலோகங்களுமே இரசக்கலவைகளை உருவாக்குகின்றன. குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளாக இரும்பு, பிளாட்டினம், தங்குதன் மற்றும் டாண்ட்டலம் ஆகியவை உள்ளன. வெள்ளி இரசக்கலவையானது பல் மருத்துவத்தில் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
தங்க இரசக்கலவையானது தங்கம் அதன் கனிமூலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் செயல்முறையில் பயன்படுகிறது.