இன்வா
மியன்மரின் பண்டைய தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
இன்வா அல்லது அவா (Inwa அல்லது Ava,) என்பது மியான்மரின் மண்தாலே மாநிலத்தில் உள்ள ஒரு பழமையான நகரம். 14 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பர்மிய இராச்சியங்களின் பண்டைய ஏகாதிபத்திய தலைநகரமாக இருந்திருக்கிறது. வரலாறு முழுவதும், இந்நகரம் பலமுறை இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டள்ளது. மார்ச் 1839 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பெரும் பூகம்பங்களால் இந்நகரம் அழிக்கப்பட்டது, பின்னர் இந்நகரம் கைவிடப்பட்டது. இந்த நகரம் இருந்ததற்கான ஒரு சில தடயங்கள் மட்டுமே இன்று இருந்தபோதிலும், மண்தாலே பகுதியில் ஒரு மிகப் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருக்கிறது.
விரைவான உண்மைகள் இன்வா အင်းဝஅவா, நாடு ...
இன்வா
အင်းဝ அவா | |
---|---|
ஆள்கூறுகள்: 21°51′N 95°59′E | |
நாடு | மியான்மர் |
மாநிலம் | மண்தாலே பிரதேசம் |
மாவட்டம் | கயாக்சி மாவட்டம் |
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு | 26 பிப்ரவரி 1365 |
மக்கள்தொகை | |
• Ethnicities | Bamar |
• Religions | தேரவாத பௌத்தம் |
நேர வலயம் | ஒசநே+6.30 (MST) |
மூடு