இடச்சு மலாக்கா
மலாக்கா நகரை டச்சுக்காரர்கள், 183 ஆண்டுகள் ஆட்சி செய்த காலம் / From Wikipedia, the free encyclopedia
இடச்சு மலாக்கா, (ஆங்கிலம்: Dutch Malacca; மலாய் மொழி: Melaka Belanda; இடச்சு மொழி: Nederlands-Malakka அல்லது De Stad en Kasteel Malacca; சீனம்: 荷属马六甲) என்பது தீபகற்ப மலேசியாவின் மலாக்கா நகரை டச்சுக்காரர்கள், 183 ஆண்டுகள் ஆட்சி செய்ததைக் குறிப்பிடுவதாகும். அதுவே மலாக்கா நகரம், வெளிநாட்டுக் கட்டுப்பாட்டில் இருந்த மிக நீண்ட காலமும் ஆகும்.
விரைவான உண்மைகள் இடச்சு மலாக்காDutch Malacca, நிலை ...
Dutch Malacca | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1641–1795 1818–1825 | |||||||||
நிலை | இடச்சு காலனி | ||||||||
தலைநகரம் | மலாக்கா மாநகரம் | ||||||||
பேசப்படும் மொழிகள் | இடச்சு மொழி மலாய் மொழி | ||||||||
ஆளுநர் | |||||||||
• 1641 – 1642 | ஜான் வான் டுவிசுட் (Jan van Twist) | ||||||||
• 1824 – 1825 | என்ட்ரிக் வான் சன் (Hendrik S. van Son) | ||||||||
பிரித்தானிய ஆளுநர் | |||||||||
• 1795 | ஆர்க்கிபால்ட் பிரவுன் (Archibald Brown) | ||||||||
• 1803 – 1818 | வில்லியம் பார்குவார் (William Farquhar) | ||||||||
வரலாற்று சகாப்தம் | பேரரசுவாதம் | ||||||||
• தொடக்கம் | 14 சனவரி 1641 | ||||||||
• பிரித்தானிய ஆட்சி | 1795–1818 | ||||||||
• 1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு ஒப்பந்தம் | 1 மார்ச் 1825 | ||||||||
|
மூடு
இடச்சுக்காரர்கள், 1641-ஆம் ஆண்டில் இருந்து 1825-ஆம் ஆண்டு வரையில், 183 ஆண்டுகள் மலாக்காவை ஆட்சி செய்தார்கள். நெப்போலியப் போர்கள் காலத்தில், 1818-ஆம் ஆண்டில் இருந்து 1825-ஆம் ஆண்டு வரையில், ஏறக்குறைய 7 ஆண்டுகள் மட்டும், பிரித்தானியர்கள் மலாக்காவை ஆட்சி செய்தார்கள். மற்ற இடைப்பட்ட காலங்களில், டச்சுக்காரர்களின் ஆட்சி தான் மேலோங்கி இருந்தது.