இசுகவுட்டிங் ஃபார் பாய்சு
From Wikipedia, the free encyclopedia
இசுகவுட்டிங் ஃபார் பாய்சு: எ ஹேண்ட்புக் ஃபார் இன்ஸ்ரக்சன் இன் குட் சிட்டிசன்சிப் (Scouting for Boys: A handbook for instruction in good citizenship தமிழாக்கம்: சிறுவர் சாரணியம்: நல்ல குடியுரிமைக்கான வழிகாட்டுதலுக்கான கையேடு) பரவலாக ஸ்கவுட்டிங் ஃபார் பாய்ஸ் என அறியப்படும் இந்நூலானது 1908 முதல் பல்வேறு பதிப்புகளில் வெளியிடப்பட்ட சாரணிய பயிற்சி பற்றிய நூலாகும். ஆரம்பப் பதிப்புகள் ராபர்ட் பேடன் பவல் என்பவரால் எழுதப்பட்டு விளக்கப்பட்டது, பிற்காலப் பதிப்புகள் மற்றவர்களால் மீண்டும் விரிவாக எழுதப்பட்டன. இந்த நூல் முதலில் பிரித்தானியப் பேரரசு மற்றும் குடிமக்களாக கடமையாற்றுவது பற்றிய ஆய்வுகள், கண்காணிப்பு, மரவேலை திறன்கள், சுய-ஒழுக்கம் மற்றும் சுய-மேம்பாடு ஆகியவற்றில் சுய-அறிவுறுத்தலுக்கான கையேடாக இருந்தது. இது அவரது சிறுவயது அனுபவங்கள், இரண்டாம் போயர் போரின் போது மேப்கிங் சிறுவர் படையிலான இவரது அனுபவம் , இங்கிலாந்தின் பிரவுன்சீ தீவில் உள்ள அவரது சோதனை முகாமின் அடிப்படையில் எழுதப்பட்டது.
இசுகவுட்டிங் ஃபார் பாய்சின் முதல் பிரிவின் அட்டைப் பக்கம் | |
நூலாசிரியர் | பேடன் பவல் |
---|---|
பட வரைஞர் | பேடன் பவல் |
அட்டைப்பட ஓவியர் | ஜான் ஹேசல் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
பொருண்மை | சாரணியம் |
வகை | சிறுவர்களுக்கான கையேடு |
வெளியிடப்பட்டது | 24 சனவரி 1908[1]ஹொரேஸ் காக்ஸ் |
OCLC | 492503066 |