ஆலிவர் ஹெவிசைடு
From Wikipedia, the free encyclopedia
ஆலிவர் ஹெவிசைடு (Oliver Heaviside,FRS)[1] (/ˈɒlɪvər ˈhɛvisaɪd/; 18 மே 1850 – 3 பெப்ரவரி 1925) தானே படித்தறிந்த ஆங்கில மின்பொறியாளர், கணிதவியலாளர், மற்றும் இயற்பியலாளர் ஆவார். இவர் மின்சுற்றுக்களை ஆய்வதற்கு சிக்கலெண்களை பயன்படுத்தியவரும், வகையீட்டுச் சமன்பாடுகளை தீர்க்க கணித நெறிமுறைகளைக் (இவை பின்னாள் இலப்பிளாசு மாற்றுக்களுக்கு இணையானவை) கண்டறிந்தவரும், மாக்சுவெல்லின் களச் சமன்பாடுகளை மின்சாரம், காந்தவியல் விசைகளையும் ஆற்றல் பாயத்தையும் கொண்டு சீரமைத்தவரும் தன்னிச்சையாக திசையன் பகுப்பாய்வை வடிவமைத்தவர்களில் ஒருவரும் ஆவார். தனது வாழ்நாளின் பெரும்பகுதியும் அறிவியல் சமூகத்துடன் ஒப்பாது இருந்தபோதும் அறிவியல் மற்றும் கணிதத்தின் அணுகுமுறையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர்.[2]அயனி மண்டலத்தின் ஒருபகுதி இவரது பெயரையும் தாங்கியவண்ணம் எவிசைடு-கென்னலி அடுக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவரது குணப்போக்கு மிகவும் கிறுக்குத்தனமாக இருந்தது.
ஆலிவர் ஹெவிசைடு | |
---|---|
பிறப்பு | (1850-05-18)18 மே 1850 காம்டென் டவுன், இலண்டன், பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 3 பெப்ரவரி 1925(1925-02-03) (அகவை 74) டோர்கே, டேவோன், பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் |
வாழிடம் | இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | மின்பொறியியல், கணிதம், இயற்பியல் |
பணியிடங்கள் | கிரேட் நார்தர்ன் டெலிகிராஃப் கம்பனி |
அறியப்படுவது | எவிசைடு கவர்-அப் முறைமை ஈவிசைட்-கென்னலி அடுக்கு மின்மறுப்பு ஹெவிசைடு படிநிலைச் சார்பு வகையீட்டு செயல்முறைகள் திசையன் பகுப்பாய்வு எவிசைடு நிபந்தனை ஓரச்சு வடம் |
விருதுகள் | பாரடே பதக்கம் (1922) அரச சமூகத்தின் ஆய்வாளர் (FRS)[1] |
குறிப்புகள் | |
புகழ்பெற்ற மேற்கோள்: எனக்கு செரிமானம் எவ்வாறு நிகழ்கின்றது என்பது முழுமையாகத் தெரியாமையால் நான் உண்ணாமல் இருக்க வேண்டுமா? |