ஆலன் சுகர்
From Wikipedia, the free encyclopedia
ஆலன் மைக்கல் சுகர், பரோன் சுகர் (ஆங்கிலம்:Alan Michael Sugar, Baron Sugar) (பிறப்பு 24 மார்ச் 1947) என்பவர் பிரித்தானிய தொழிலதிபர், ஊடகப் பிரபலம், அரசியல்வாதி மற்றும் அரசியல் ஆலோசகராவார்.[4][5] 2015 இல் சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் நூறு கோடிக்கு மேல் சொத்துள்ளவர்கள் பட்டியலில் சுகர் இடம்பெற்றார். 2016 இல் £1.15 பில்லியன் மதிப்புடன் ஐக்கிய இராஜ்யத்தில் 95வது பணக்கார நபராக இடம்பிடித்தார்.[1] தனது ஆம்ஸ்டர்ட் என்ற வாடிக்கையாளர் மின்னணு சாதன நிறுவனத்தை 2007 இல் பெரும் விலைக்கு விற்றார்.[6]
விரைவான உண்மைகள் தி ரைட் ஹானரெபில் தி லாட் சுகர், பிறப்பு ...
தி ரைட் ஹானரெபில் தி லாட் சுகர் | |
---|---|
63வது பிரிடிஷ் அகாதெமி திரைப்பட விழாவில் | |
பிறப்பு | ஆலன் மைக்கல் சுகர் 24 மார்ச்சு 1947 (1947-03-24) (அகவை 77) கிழக்கு லண்டன், இங்கிலாந்து |
இருப்பிடம் | சிக்வெல், எஸ்ஸெக்ஸ் |
தேசியம் | பிரித்தானியர் |
பணி | தொழிற்முனைவோர், பிரபலம், எழுத்தாளார், அரசியல்வாதி |
சொத்து மதிப்பு | £1.15 பில்லியன் (2016)[1] |
அரசியல் கட்சி | சுயேட்சை (2015-) தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)[2] (1997–2015)[3] |
வாழ்க்கைத் துணை | அன் சுகர், லெடி சுகர் (née Simons) (தி. 1968) |
பிள்ளைகள் | சிம்மன் சுகர் டேனியல் சுகர் லூசீ சுகர் |
உறவினர்கள் | ரீட்டா சிமன்ஸ் |
அரசு தொழில்துறை ஆலோசகர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 மே 2016 | |
பிரதமர் | டேவிட் கேமரன் |
பிரபுக்கள் அவை உறுப்பினர் பிரபுகள் டெம்பொரல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 ஜூலை 2009 | |
மூடு
டோடேன்ஹம் ஹாட்ஸ்பூர் கால்பந்து குழுவின் தலைவராக 1991 முதல் 2001 வரை இருந்தார். டோனால்ட் டிரம்ப் நடித்து மார்க் பார்னெட் உருவாக்கிய நிகழ்ச்சி போல பிபிசி தொலைக்காட்சியில் அப்ரண்டீஸ் என்ற தொடரில் சுகர் பங்கேற்றார்.[7]