ஆர்மேனிய மேட்டுநிலங்கள்
From Wikipedia, the free encyclopedia
ஆர்மேனிய மேட்டுநிலங்கள் (Armenian Highlands) (ஆர்மீனியம்: Հայկական լեռնաշխարհ, Haykakan leṙnašxarh); என்றறியப்படும் ஆர்மேனிய உயர்நிலம் அல்லது ஆர்மேனிய பீடபூமி ,[1][2] சுருக்கமாக ஆர்மேனியா மத்திய கிழக்கு நாடுகளின் தென்பகுதியிலுள்ள மிகவும் உயர்ந்த மூன்று பீடபூமிகளுள் ஒன்றாகும்.[2] மேற்கில் ஏகேயன் கடற்கறைத் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து அனடோலியன் பீடபூமிவரை மெல்ல மெல்ல உயர்ந்து, கப்பதோக்கியாவின் கிழக்குப் பகுதிவரை பரவியுள்ளது. தென்கிழக்கில் கடல் மட்டத்திலிருந்து ஈரானியப் பீடபூமிவரை 600 மீட்டர்கள் (2,000 அடி) சட்டென உயர்கிறது. [2] காகஸ் மலைத்தொடர் வடகிழக்கே ஆர்மேனிய பீடபூமி வரை விரிவடைகிறது. இதன் தென்கிழக்கில் ஆர்மேனிய மெசபடோமியா அமைந்துள்ளது.
ஆர்மேனிய மேட்டுநிலங்கள் | |
துருக்கி ஈரான் எல்லையிலுள்ள ஆர்மேனிய மலைத்தொடர் | |
நாடு | ஆர்மேனியா அசர்பைசான் ஜோர்ஜியா (நாடு) ஈரான் துருக்கி |
---|---|
பகுதி | சிறிய காகசஸ் |
மிகவுயர் புள்ளி | அரராத் மலை |
- உயர்வு | 5,137 மீ (16,854 அடி) |
- ஆள்கூறுகள் | 39°43′N 44°16′E |
பரப்பு | 4,00,000 கிமீ² (1,54,441 ச.மைல்) |
செயற்கைக்கோள் படம்
|
பண்டைய காலத்தில் இப்பகுதி ஆர்மேனிய வரலாற்றில் ஆர்மேனியா மேஜர் என அழைக்கப்பட்டது ஆர்மேனியாவுடன் தொடர்புடைய பண்டைய அரசியல் நிலப்பிரிவுகளில் ஆர்மேனிய மேட்டுநிலமும் ஒன்றாக அறியப்படுகிறது. மற்றவை முறையே ஆர்மேனியா மைனர் (Armenia Minor), சிசிலியாவின் ஆர்மேனியப் பேரரசு அல்லது சிசிலியா (Cilicia]), கொம்மாகீன் (Commagene) ஆகியவையாகும்.[3][4] மத்திய காலத்தில் துருக்கியர்கள் பெருமளவில் ஆர்மேனிய மேட்டு நிலங்களில் குறியேறினார்கள்.
இப்பகுதியில் வரலாற்று காலத்திலிருந்தே ஆர்மேனியர்கள் பெரும்பான்மையின்ர் வாழ்கின்றனர். மேலும் சிறுபான்மை ஜியார்ஜியன்கள், அசிரியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரும் வாழ்கின்றனர். இதன் மேற்குப் பகுதியில் குடியேறிய கிறித்துவர்கள், ஆர்மேனிய இனப்படுகொலை காரணமாக அழிக்கப்பட்டனர். மேலும் சிறிதளவு கிரேக்க இனப்படுகொலைகள், அசிரிய இனப்படுகொலைகள் ஆகியவற்றின் காரணமாகவும் இப்பகுதியின் மக்கள் இனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு ஆர்மேனியர்கள், குர்துகள், அசர்பைஜான்கள், துருக்கியர்கள், ஜியார்ஜியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர்.