ஆசுதானா சரவாக்
மலேசியா, சரவாக், கூச்சிங் மாநகரில் உள்ள ஓர் அரண்மனை / From Wikipedia, the free encyclopedia
ஆசுதானா சரவாக் அல்லது சரவாக் அரண்மனை (ஆங்கிலம்: The Astana, Sarawak; மலாய்: Astana Negeri Sarawak); என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் மாநகரில் உள்ள ஓர் அரண்மனையாகும். சரவாக் ஆற்றின் வடக்குத் திசையின் கரையோரத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் ஆசுதானா சரவாக் Astana Sarawak, பொதுவான தகவல்கள் ...
ஆசுதானா சரவாக் Astana Sarawak | |
---|---|
கூச்சிங் நகரில் ஆசுதானா சரவாக் | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | கட்டி முடிக்கப்பட்டது |
வகை | அரண்மனை |
இடம் | கூச்சிங், சரவாக் |
நாடு | மலேசியா |
ஆள்கூற்று | 1°33′49″N 110°20′44″E |
கட்டுமான ஆரம்பம் | 1870; 154 ஆண்டுகளுக்கு முன்னர் (1870) |
நிறைவுற்றது | 1888; 136 ஆண்டுகளுக்கு முன்னர் (1888) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 1 |
மூடு
இந்த அரண்மனை, சரவாக் மாநிலத்தின் ஆளுநரான யாங் டி பெர்துவா சரவாக் (Yang di-Pertua Negeri Sarawak) அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். ’இஸ்தானா’ எனும் மலாய்ச் சொல்லின் மாறுபாட்டுச் சொல்தான் ’ஆஸ்தானா’. அரண்மனை என தமிழில் பொருள்படும்.[1]