ஆங் சான்
From Wikipedia, the free encyclopedia
ஜெனரல் ஆங் சான் (Aung San; பெப்ரவரி 13, 1915 – சூலை 19, 1947) என்பவர் பர்மாவின் புரட்சியாளர், தேசியவாதி, இராணுவ மேஜர், மற்றும் அரசியல்வாதி ஆவார்.
விரைவான உண்மைகள் மேஜர் ஜெனரல்ஆங் சான்Aung San, பிரித்தானிய பர்மாவின் பிரதமர் ...
மேஜர் ஜெனரல் ஆங் சான் Aung San | |
---|---|
အောင်ဆန်း | |
பிரித்தானிய பர்மாவின் பிரதமர் | |
பதவியில் 26 செப்டம்பர் 1946 – 19 சூலை 1947 | |
முன்னையவர் | சர் பாவ் துன் |
பின்னவர் | யு நூ |
பாசிசத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் | |
பதவியில் 27 மார்ச் 1945 – 19 சூலை 1947 | |
பின்னவர் | யு நூ |
பர்மாவின் போர் அமைச்சர் | |
பதவியில் 1 ஆகத்து 1943 – 27 மார்ச் 1945 | |
பர்மியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் 15 ஆகத்து 1939 – 1940 | |
பின்னவர் | தாக்கின் சோயி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தெயின் லின் (1915-02-13)13 பெப்ரவரி 1915 நட்மாவுக், மாகுவே, பர்மா |
இறப்பு | சூலை 19, 1947(1947-07-19) (அகவை 32) இரங்கூன், பர்மா |
Manner of death | படுகொலை |
இளைப்பாறுமிடம் | தியாகிகள் நினைவகம், மியான்மர் |
தேசியம் | பர்மியர் |
அரசியல் கட்சி | பாசிசத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணி பர்மியக் கம்யூனிஸ்டுக் கட்சி |
துணைவர் | கின் கிய் (தி. 6 செப்டம்பர் 1942) |
பிள்ளைகள் | ஆங் சான் ஊ ஆங் சான் சூச்சி, மேலும் இருவர் |
பெற்றோர் | ஊ பா டாவ் சூ |
முன்னாள் கல்லூரி | இரங்கூன் பல்கலைக்கழகம் யெனாங்கியாங் உயர் பாடசாலை |
வேலை | அரசியல்வாதி, இராணுவ அதிகாரி |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | பர்மா தேசிய இராணுவம் பாசிசத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணி கம்யூனிஸ்டுக் கட்சி |
தரம் | மேஜர் ஜெனரல் |
மூடு
ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26, 1942 இல் உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை அடைய ஆறு மாதங்களின் முன்னரே படுகொலை செய்யப்பட்டார். பர்மிய மக்களால் "போகியோக்" (ஜெனரல்), என அன்புடன் அழைக்கப்படும் இவரின் பெயர் இன்றும் பர்மிய அரசியலில் பேசப்படும் ஒருவர்.
ஆங் சான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் எதிர்க்கட்சித் தலைவியுமான ஆங் சான் சூ கீயின் தந்தையாவார்.