அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட்
புருசிய புவியியலாளர், இயற்கையியலாளர் மற்றும் நாடுகாண் பயணி / From Wikipedia, the free encyclopedia
அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் (Alexander von Humboldt, 14 செப்டம்பர் 1769 – 6 மே 1859). ஒரு புருசியப் புவியியலாளர், இயற்கை அறிவியலாளர், நாடுகாண் பயணி. தனது அறிவியல் பயணத்தைப் பற்றி காஸ்மோஸ் என்ற நூலாக கூம்போல்ட் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக எழுதிய முப்பது நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஆங்கிலத்தில் மூன்று முறை இவையாவும் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது நூல்கள் பல இளம் அறிவியல் அறிஞர்களைத் தோற்றுவிக்க உதவியது, குறிப்பாக, பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிமுகப்படுத்திய டார்வினை இவரது எழுத்துக்கள் ஊக்குவித்தது. நான் தற்போது ஹம்போல்ட்டைப் படிக்க மட்டுமே பொருத்தமாக இருக்கிறேன்; அவர் இன்னொரு சூரியனைப் போல நான் பார்க்கும் அனைத்தையும் ஒளிரச் செய்கிறார் என்று தம் இளவயதில் தான் வழிகாட்டியாகக் கொண்ட கூம்போல்ட்டைப் பற்றி அவரது அஞ்சல் நண்பரான டார்வின் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். டார்வின் தனது அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற நூலை வெளியிட்ட காலத்தில் ஹம்போல்ட் புகழின் உச்சியில் இருந்தவர்.
அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் Alexander von Humboldt | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 14, 1769 பெர்லின், புருசிய இராச்சியம் (புனித உரோமைப் பேரரசு) |
இறப்பு | 6 மே 1859(1859-05-06) (அகவை 89) பெர்லின், புருசிய இராச்சியம் (செருமனி]] |
தேசியம் | செருமனியர் |
துறை | புவியியல் |
கல்வி கற்ற இடங்கள் | பிரைபேர்க் கல்லூரி (பட்டயம், 1792) பிராங்க்பூர்ட் பல்கலைக்கழகம் கோட்டிங்கன் பல்கலைக்கழகம் பெர்லின் பல்கலைக்கழகம்[1] |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | அகாசி லுயி[2] |
அறியப்படுவது | உயிர்ப்புவியியல் |
தாக்கம் செலுத்தியோர் | பிரீடரிக் ஷெல்லிங்[1][3] |
பின்பற்றுவோர் | டார்வின், வாலேசு, தூரோ, விட்மன், எமர்சன், இர்விங் |
விருதுகள் | கோப்லி விருது (1852) |
கையொப்பம் |