அரால்டு இயூரீ
அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் / From Wikipedia, the free encyclopedia
அரால்டு கிளேட்டன் இயூரீ (Harold Clayton Urey) வேந்தியல் குமுகப் பேராளர்[1] (ஏப்பிரல் 29, 1893 – சனவரி 5, 1981) ஓர் அமெரிக்க இயற்பியல் வேதியியல் அறிவியலாளர். இவர் ஐதரசனின் ஓரிடத்தானாகிய தியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக 1934 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றுப் புகழ் ஈட்டியவர். அணுகுண்டு உருவாக்கத்திற்கும், உயிரற்ற பொருள்களில் இருந்து உயிருக்குத் தேவையான கரிமப்பொருள்கள் உருவாகுவதைச் செய்து காட்டிய மில்லர்-உரே செயல்முறைக்கும் புகழ் பெற்றவர்[2]
விரைவான உண்மைகள் அரால்டு கிளேட்டன் இயூரீ Harold Clayton Urey, பிறப்பு ...
அரால்டு கிளேட்டன் இயூரீ Harold Clayton Urey | |
---|---|
அரால்டு உரே ~ 1963 | |
பிறப்பு | (1893-04-29)ஏப்ரல் 29, 1893 வாக்கர்ட்டன், இண்டியானா, அமெரிக்கா |
இறப்பு | சனவரி 5, 1981(1981-01-05) (அகவை 87) இலா ஃகொய்யா (La Jolla), கலிபோர்னியா, அமெரிக்கா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
துறை | இயற்பியல் வேதியியல் |
பணியிடங்கள் | கோபனாகன் பல்கலைக்கழகம் சான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகம் கொலம்பியா பல்கலைக்கழகம் அணுக்கருவியல் ஆய்வுகள் கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழம், சான் தியேகோ |
கல்வி கற்ற இடங்கள் | மோண்டானா பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கிலி |
ஆய்வு நெறியாளர் | கில்பெர்ட்டு என். இலூயிசு |
முனைவர் பட்ட மாணவர்கள் | இசுட்டான்லி மில்லர் |
அறியப்படுவது | தியூட்டிரியம் கண்டுபிடிப்பு மில்லர்-இயூரீ செய்முறைக்காட்டு இயூரீ-பிராடிலி விசைப்புலம் |
விருதுகள் | நோபல் பரிசு (வேதியியல்)(1934) பிராங்கிளின் பதக்கம் (1943) வேந்தியல் குமுகப் பேராளர்[1] |
கையொப்பம் |
மூடு