அரச மலேசிய வான்படை
From Wikipedia, the free encyclopedia
அரச மலேசிய வான்படை அல்லது மலேசிய வான்படை ஆங்கிலம்: Royal Malaysian Air Force (RMAF); மலாய்: Tentera Udara Diraja Malaysia (TUDM;) என்பது மலேசிய பாதுகாப்பு படைகளில் உள்ள மூன்று படைப்பிரிவுகளில் ஒரு பிரிவாகும். மலேசிய நாட்டின் முக்கிய பாதுகாப்பு படைகளில் ஒன்றாகத் திகழும் இந்தப் படை, வான்சார்ந்த கண்காணிப்பு மற்றும் வான்சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது.[3]
விரைவான உண்மைகள் அரச மலேசிய வான்படை Royal Malaysian Air Force, உருவாக்கம் ...
அரச மலேசிய வான்படை Royal Malaysian Air Force | |
---|---|
Tentera Udara Diraja Malaysia تنترا اودارا دراج مليسيا | |
அரச மலேசிய வான்படையின் சின்னம் | |
உருவாக்கம் | 2 சூன் 1958; 65 ஆண்டுகள் முன்னர் (1958-06-02); (1936-இல் மலாயா துணை வான் படையாக நிறுவப்பட்டது) |
நாடு | மலேசியா |
வகை | வான்படை |
பொறுப்பு | வான் போர் |
அளவு | |
பகுதி | மலேசிய பாதுகாப்பு படைகள் |
குறிக்கோள்(கள்) | எப்போதும் வானத்தில் (Sentiasa di Angkasa Raya) ("Always in the Sky") |
நிறம் |
|
ஆண்டு விழாக்கள் | சூன் 2-ஆம் தேதி |
சண்டைகள் |
|
இணையதளம் | airforce |
தளபதிகள் | |
தற்போதைய தளபதி | பகாங் சுல்தான் அப்துல்லா |
படைத்துறைச் சின்னங்கள் | |
பதக்கம் | |
வானூர்தி அடையாளம் | |
சின்னம் | |
வானூர்திகள் | |
சண்டை | சுக்கோய் Su-30MKM, F/A-18 Hornet, BAE Hawk 200 |
உலங்கு வானூர்தி | சிக்கோர்சுகி UH-60 Black Hawk, Eurocopter EC 725, அகஸ்தா வெஸ்ட்லேண்ட் AW139 |
சுற்றுக்காவல் | காசா/IPTN CN-235, Beechcraft Super King Air |
பயிற்சி | BAE Systems Hawk, பிளாதுஸ் PC-7 Turbo Trainer, Beechcraft Super King Air |
போக்குவரத்து | ஏர்பஸ் A400M Atlas, C-130, CASA/IPTN CN-235, Boeing Business Jet |
டேங்கர் | லோக் கீட் மார்டின் KC-130 |
மூடு
2 ஜூன் 1958-இல், மலாயா விடுதலைக்குப் பின்னர், அரச மலாயா கூட்டரசு வான்படை ஆங்கிலம்: Royal Federation of Malaya Air Force; மலாய்: Tentera Udara Diraja Persekutuan Tanah Melayu) எனும் பெயரில் ஒரு வான்படை மலாயாவில் தோற்றுவிக்கப்பட்டது.
அரச மலேசிய வான்படையானது, ஐக்கிய அமெரிக்கா, ரசியா, ஐரோப்பா நாடுகளில் தயாரிக்கப்பட்ட நவீன வானூர்திகளின் கலவையில் இயங்குகிறது.