அபார் பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
அபார் பிரதேசம் (Afar Region) எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செம்மெரா நகரம் ஆகும். இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாக அபார் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இதன் தெற்குப் பகுதியில் அவாஸ் ஆறு பாய்கிறது. அபார் பிரதேசம் 72,053 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மேலும் இப்பகுதியில் அவாஸ் தேசியப் பூங்கா, அப்தெரா ஏரி மற்றும் அலே எரிமலை உள்ளது. 2017-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அபார் பிரதேசத்தின் மக்கள் தொகை 18,12,002 ஆகும்.
விரைவான உண்மைகள் அபார் பிரதேசம் አፋር ክልልQafar Rakaakayak, நாடு ...
அபார் பிரதேசம்
አፋር ክልል Qafar Rakaakayak | |
---|---|
பிரதேச மாகாணம் | |
எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அபார் பிரதேசத்தின் அமைவிடம் | |
நாடு | எத்தியோப்பியா |
தலைநகரம் | செம்மெரா |
அரசு | |
• ஆளுநர் | அவோல் அர்பா |
பரப்பளவு | |
• மொத்தம் | 72,053 km2 (27,820 sq mi) |
[1] | |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 18,12,002[2] |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:ET |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.428[3] low • 11th of 11 |
மூடு