அந்தோனி புரூக்
சரவாக் இராச்சியத்தில் ராஜா மூடா சரவாக் எனும் இளவரசர் / From Wikipedia, the free encyclopedia
அந்தோனி புரூக் அல்லது ராஜா மூடா அந்தோனி புரூக் (ஆங்கிலம்: Anthony Brooke அல்லது Anthony Walter Dayrell Brooke; மலாய்: Rajah Muda Sarawak Anthony Brooke) (பிறப்பு: 10 டிசம்பர் 1912 – இறப்பு: 2 மார்ச் 2011), என்பவர் சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா எனும் புரூக் பரம்பரையில்; சரவாக் இராச்சியத்தில் ராஜா மூடா சரவாக் எனும் ஓர் இளவரசர்.[1]
விரைவான உண்மைகள் அந்தோனி புரூக் Anthony Brooke, முடிசூட்டுதல் ...
அந்தோனி புரூக் Anthony Brooke | |
---|---|
வெள்ளை இராஜா (பட்டத்திற்கு உரியவர்) | |
முடிசூட்டுதல் | ராஜா மூடா சரவாக் Rajah Muda of Sarawak |
பிறப்பு | (1912-12-10)10 திசம்பர் 1912 |
இறப்பு | 2 மார்ச்சு 2011(2011-03-02) (அகவை 98) வாங்கனுய், நியூசிலாந்து |
புதைத்த இடம் | |
மரபு | புரூக் வம்சாவழி |
அரசமரபு | வெள்ளை இராஜா |
தந்தை | பெர்த்திராம் புரூக் |
தாய் | கிளாடிஸ் மில்டன் பால்மர் (Gladys Milton Palmer) |
மதம் | கிறிஸ்துவம் |
மூடு
இவரின் மாமா சார்லசு வைனர் புரூக், 25 ஆகஸ்டு 1937-இல், இவரை வெள்ளை இராஜா பரம்பரையில்; ராஜா மூடா சரவாக் எனும் இளவரசர் பதவியை வழங்கினார்.
அந்தோனி புரூக்கின் தந்தையார் பெர்த்திராம் புரூக். இவர் (பெர்த்திராம் புரூக்); வெள்ளை இராஜா புரூக் பரம்பரையில் இரண்டாவது இராஜாவான சார்லசு புரூக் (Charles Brooke) என்பவரின் இரண்டாவது மகனாவார். மூன்றாவது இராஜா சார்லசு வைனர் புரூக்கின் தம்பியாவார்.[2]