அந்தாலூசியா
From Wikipedia, the free encyclopedia
அந்தாலூசியா (Andalusia, எசுப்பானியம்: Andalucía) எசுப்பானியாவின் 17 தன்னாட்சி சமூகங்களில் மக்கள்தொகையில் முதலாமிடம் வகிக்கும் தன்னாட்சி பகுதியாகும்; பரப்பளவில் காஸ்தில் மற்றும் வியோனை அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த தன்னாட்சிப் பகுதி எட்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன: அல்மீரியா, காதிசு, கோர்டோபா, கிரானடா, உயெல்வா, ஹேன், மலாகா, செவில் இதன் தலைநகரம் செவீயா (எசுப்பானியம்: Sevilla).
அந்தாலூசியா
Andalucía (எசுப்பானியம்) | |
---|---|
குறிக்கோளுரை: அந்தாலூசியா தனக்காகவும் எசுப்பானியா மற்றும் மனிதத்திற்காகவும் Andalucía por sí, para España y la humanidad[1] ("Andalusia by itself, for Spain and humanity") | |
பண்: La bandera blanca y verde | |
Location of Andalusia within Spain. | |
ஆள்கூறுகள்: 37°23′N 5°59′W | |
நாடு | எசுப்பானியா |
தலைநகரம் | செவீயா |
அரசு | |
• நிர்வாகம் | அந்தாலூசியா சட்டமன்றம் |
• தலைவர் | சுசனா டயஸ் (PSOE) |
பரப்பளவு (17.2% of Spain) | |
• மொத்தம் | 87,268 km2 (33,694 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2nd |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 83,88,107 |
• தரவரிசை | 1st |
• அடர்த்தி | 96/km2 (250/sq mi) |
• Percent | 17.84% of Spain |
இனங்கள் | அந்தாலூசியர் andaluz, -za[2] |
ISO 3166-2 | AN |
ஆட்சி மொழி | எசுப்பானியம் |
Statute of Autonomy | 30 December 1981 first revision 2002 second revision 2007[3] |
Legislature | நாடாளுமன்றம் |
- காங்கிரஸ் | 62 Deputies of 350 |
- செனட் | 40 Senators of 264 |
இணையதளம் | www |
அந்தாலூசியா ஐபீரிய மூவலந்தீவின் தெற்கில் உள்ளது. எக்சுட்ரீமதுரா, காஸ்தில்-லா மஞ்சா தன்னாட்சி பகுதிகளுக்கு தெற்கிலும் முர்சியா தன்னாட்சி பகுதிக்கும் நடுநிலக்கடலுக்கும் மேற்கேயும் போர்த்துகல்லுக்கும் அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கு கிழக்கிலும் நடுநிலக் கடல் மற்றும் ஜிப்ரால்ட்டர் நீரிணைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. சிறிய பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான ஜிப்ரால்ட்டர் அந்தாலூசிய மாநிலம் காடிசுடன் ஜிப்ரால்ட்டர் நீரிணையின் கிழக்கு முனையுடன் நில எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.