அட்லசு மலைத்தொடர்
From Wikipedia, the free encyclopedia
அட்லசு மலைத்தொடர் (The Atlas Mountains) (அரபு மொழி: جِـبَـال الْأَطْـلَـس; idurar n waṭlas) மக்ரிபில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இந்த மலைத்தொடர் 2500 கி.மீ (1600 மைல்கள்) தொலைவிற்கு மொராக்கோ, அல்சீரியா மற்றும் தூனிசியா ஆகிய நாடுகளின் வழியாக விரவிக் கிடக்கிறது. இந்த மலைத்தொடரின் உயர்ந்த சிகரமானது தெளப்கால் (உயரம் 4,167 மீட்டர் அல்லது 13,671 அடி)ஆகும். இந்த சிகரமானது மொராக்கோவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரானது, நடுநிலக்கடல் மற்றும் அத்திலாந்திக்குப் பெருங்கடல் கடற்கரைகளைச் சகாரா பாலைவனத்திலிருந்து பிரிக்கிறது.[1] அட்லசு மலைத்தொடரில் பேர்பர்கள் (குறிப்பிட்ட இன மக்கள்) முதன்மையாக வசித்து வந்தனர்[2] மலை என்பதற்கான பேர்பர் மொழி வார்த்தைகள் அட்ரார் மற்றும் அட்ராஸ் ஆகும். அட்லசு என்பதற்கான பெயராய்வியலில் மேலே சொன்ன வார்த்தைகள், மொழியியல் உடன்பிறப்புகளாகக் கருதப்படுகின்றன. இந்த மலைத் தொடரானது பெரும்பான்மையாக ஐரோப்பாவில் உள்ளதைப் போல ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் தனித்தன்மை வாய்ந்த பல்வேறு விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது. அவற்றுள் பல அருகிய இனமாகவும் சில ஏற்கெனவே அற்றுவிட்ட இனங்களாகவும் ஆகிவிட்டன.
அட்லசு மலைத்தொடர் | |
---|---|
மொராக்கோவில் காணப்படும் உயர்ந்த அட்லசு மலைத்தொடரின் தெளப்கல் தேசிய பூங்காவில் உள்ள தெளப்கல் மலைச்சிகரம் | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | தெளப்கல், மொராக்கோ |
உயரம் | 4,167 m (13,671 அடி) |
பட்டியல்கள் | |
ஆள்கூறு | 31°03′43″N 07°54′58″W |
புவியியல் | |
நாடுகள் | மொராக்கோ, அல்சீரியா and தூனிசியா |
நிலவியல் | |
பாறையின் வயது | தொன்மை பேரூழிக்காலம் |