அகர்னானியா
வரலாற்று பிராந்தியம் / From Wikipedia, the free encyclopedia
அகார்னானியா ( கிரேக்கம்: Ἀκαρνανία ) என்பது மேற்கு-நடு கிரேக்கத்தின் ஒரு பகுதி ஆகும். இது அயோனியன் கடலோரத்தில், ஏட்டோலியாவுக்கு மேற்கே, அச்செலஸ் ஆற்றை எல்லையாக கொண்டுள்ளது. மேலும் இது கொரிந்து வளைகுடாவின் நுழைவாயில்போல கலிடன் வளைகுடாவின் வடக்கே அமைந்துள்ளது. இன்று இது ஏட்டோலியா-அகார்னானியாவின் பிராந்திய அலகின் மேற்குப் பகுதியாக உள்ளது. இதன் பண்டைய காலத்தலை தலைநகரமும், முக்கிய நகரமாக ஸ்ட்ராடோஸ் இருந்தது. கொரிந்தியன் வளைகுடாவின் அகர்னானியாவின் வடக்கு [1] பகுதி எபிரஸ் பகுதியின் ஒரு பகுதியாக கருதப்பட்டது.
விரைவான உண்மைகள் அகர்னானியா Ἀκαρνανία, அமைவிடம் ...
அகர்னானியா
Ἀκαρνανία | |
---|---|
பண்டைக் கிரேக்க பிராந்தியம் | |
Map of ancient Acarnania | |
அமைவிடம் | மேற்கு கிரேக்கம் |
பெரிய நகரம் | ஸ்ட்ராடோஸ் |
பேச்சுவழக்கு | டோரிக் |
மூடு
கிரேக்கத் தொன்மவியலில் அகர்னானியாவின் அடித்தளம் என்று பாரம்பரியமாக அல்க்மேயோனின் மகன் அகர்னன் என்று கூறப்பட்டது.